என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » விசாரணை கைதி
நீங்கள் தேடியது "விசாரணை கைதி"
புற்றுநோய் முற்றிய நிலையில் ராஜஸ்தான் சிறையில் கம்பிகளுடன் இறுதி நாட்களை எண்ணிவரும் விசாரணை கைதி தாயின் மடியில் சாவதற்கு அனுமதி கோரி சுப்ரீம் கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
புதுடெல்லி:
ராஜஸ்தான் மாநில தலைநகரான ஜெய்ப்பூரை சேர்ந்த ஒருவர் கள்ளநோட்டு வைத்திருந்ததாக கடந்த ஆண்டில் போலீசார் கைது செய்தனர்.
ஜெய்ப்பூர் சிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டுள்ள அவருக்கு வாயில் ஏற்பட்ட புற்றுநோய் மிகவும் முற்றி மூன்றாவது நிலையை எட்டியுள்ள நிலையில் கடந்த 8 மாதங்களாக தினந்தோறும் ‘ரேடியோதரபி’ எனப்படும் கதிர்வீச்சு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
என் மீதான வழக்கு விசாரணைக்கு வந்து தீர்ப்பளிக்கப்பட பல மாதங்கள் ஆகலாம். அதற்குள் புற்றுநோயின் தாக்கத்தாலும் மன உளைச்சலிலும் பைத்தியமாகி நான் இறந்துவிட நேரிடலாம். எனவே, உடல்நிலை கருதி இடைக்கால ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள் கீழமை நீதிமன்றத்தால் அடுத்தடுத்து தள்ளுபடி செய்யப்பட்டன.
கடைசியாக ராஜஸ்தான் ஐகோர்ட்டும் தனது ஜாமீன் மனுவை கடந்த மாதம் தள்ளுபடி செய்து விட்டதால் விரக்தியின் விளிம்பு நிலைக்கு சென்றுவிட்ட அந்த கைதி, ‘எனது நாட்கள் எண்ணப்படுகின்றன. வாழ்நாளில் எஞ்சியிருக்கும் சில நாட்களையாவது குடும்பத்தார், உறவினர்களுடன் கழித்து விட்டு, என் தாயாரின் மடியில் தலைவைத்து சாக விரும்புகிறேன்.
எனவே, எனது கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும்' என அந்த கைதி தற்போது சுப்ரீம் கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி அனிருதா போஸ் ஆகியோரை கொண்ட அமர்வு மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக ஜூன் 5-ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு ராஜஸ்தான் மாநில போலீஸ் டி.ஜி.பி.க்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
முதுகுளத்தூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட விசாரணை கைதி மர்மமான முறையில் இறந்தார்.
முதுகுளத்தூர்:
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அரசு மருத்துவமனை முதல் தெருவைச் சேர்ந்தவர் மகாதேவன் (வயது 74). இவர் ஓய்வு பெற்ற சுகாதாரத்துறை அதிகாரி ஆவார்.
இவரது வீட்டில் நேற்று முன்தினம் 16 பவுன் நகை, ரூ.13 ஆயிரம், ஏ.டி.எம். கார்டுகள் திருடு போனது. மேலும் ஏ.டி.எம். கார்டுகள் மூலமாக ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் எடுக்கப்பட்டு இருப்பதும் தெரியவந்தது.
இது குறித்த புகாரின் பேரில் முதுகுளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த திருட்டு வழக்கு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த மாசிலாமணி மகன் மணிகண்டன் (30) என்பவரை போலீசார் பிடித்துச் சென்றனர். அவரை போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் விசாரணை கைதி மணிகண்டன் மர்மமான முறையில் போலீஸ் நிலையத்திலேயே இறந்தார்.
அவர் போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்டாரா? அல்லது மாரடைப்பு ஏற்பட்டு இறந்தாரா? என்பது தெரியவில்லை.
இது குறித்து தகவல் அறிந்ததும் மணிகண்டனின் உறவினர்கள் முதுகுளத்தூர் போலீஸ் நிலையத்துக்கு திரண்டு வந்தனர். ஆனால் போலீசார் அவர்களை உள்ளே விட மறுத்ததுடன் நுழைவுவாயில் கதவை பூட்டினர். மேலும் உறவினர்களிடம் எந்தவித தகவலும் கூற மறுத்துவிட்டனர்.
இறந்த மணிகண்டனின் உடல் பிரேத பரிசோதனைக்காக முதுகுளத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தால் பிரச்சினை ஏற்படும் என்று கருதி பரமக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா நேரடி விசாரணை நடத்தினர். மேலும் முதுகுளத்தூர் போலீசாரும் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனின் மர்மச்சாவு குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் முதுகுளத்தூரில் இன்று பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒடிசா மாநிலம் ஜார்படா சிறப்பு சிறையில் விசாரணை கைதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புவனேஸ்வரர்:

இதுதொடர்பாக, காவல்துறை அதிகாரி கூறுகையில், பாலியல் வழக்கில் விசாரணை கைதியாக சிறையில் இருந்த ஜிடேந்திர பிஸ்வால், இன்று காலை திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தெரிவித்தார்.
மேலும், இச்சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை, காவல்துறை உயர் அதிகாரிகள் மூலம் நடத்தப்படும் என டிஜிபி ஷர்மா தெரிவித்துள்ளார். #undertrialprisonerdead #Jharpadajail

×

X